அதிமுக மற்றும் இதர கட்சி சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர் உளுந்தூர்பேட்டையில் அரசியல் பரபரப்பு. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 6 April 2026

அதிமுக மற்றும் இதர கட்சி சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர் உளுந்தூர்பேட்டையில் அரசியல் பரபரப்பு.

 


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் இன்று நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், அதிமுக மற்றும் இதர கட்சி சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த நகர அம்மா பேரவை துணை செயலாளர் பஷீர் தலைமையில், டைலர் ஜின்னா உட்பட பலர் தங்களது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வு கட்சி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் முன்னிலையில் நடைபெற்றது.


இந்த இணைவு நிகழ்ச்சியின் போது, திமுக நிர்வாகிகள் புதியதாக இணைந்தவர்களை வரவேற்று, வரவிருக்கும் தேர்தல்களில் கட்சியின் வெற்றிக்காக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.


அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் பெரும்பான்மையானோர் திமுகவில் இணைந்திருப்பது, உளுந்தூர்பேட்டை பகுதியில் அரசியல் நிலவரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.


D.செல்வம்

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் 

தமிழக குரல்.

No comments:

Post a Comment

Post Top Ad